7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: முக்கிய மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
வடமேற்கு மாகாணமான அலாஸ்காவின் கடற்கரையில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உள்ளூர் நேரப்படி, சுமார் 12.38 மணிக்கு நிலநடுக்கத்தை பதிவு செய்தது.
இது அலாஸ்கா தீபகற்பத்திற்கு தெற்கே, பசிபிக் பெருங்கடலில் மையம் கொண்டிருந்தது.
சுனாமி எச்சரிக்கை
கோடியாக் தீவு, அலாஸ்கா தீபகற்பம் மற்றும் கிழக்கு அலூடியன் தீவுகளின் சில பகுதிகளில் சாத்தியமான பாதிப்புகள் உள்ளன.
இதனைத் தொடர்ந்து தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் (NTWC) பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், "நீங்கள் இந்த கடலோரப் பகுதியில் இருந்தால், உள்நாட்டிற்கு உயர்ந்த நிலத்திற்கு செல்லுங்கள். சுனாமி எச்சரிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்குடன் கூடிய சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது ஏற்கனவே நிகழும் என்பதைக் குறிக்கிறது" என கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |