செந்தில் பாலாஜி நல்ல நண்பர்.., திடீரென அவர் மீது வருத்தப்பட்ட டிடிவி தினகரன்
நண்பர் என்ற முறையில் செந்தில் பாலாஜியை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில்..
தமிழக மாவட்டமான திருப்பூரில் நடைபெற்ற அமமுக தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வரும் தேர்தலில் அமமுக முக்கியமான கூட்டணியில் அங்கம் வகிக்கும். பிரதமரை தேர்ந்தெடுப்பதில் எங்கள் கட்சி செயல்படும்.
சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி சில வேலைகளை செய்து வருகிறார். ஆனால், அது நிச்சயம் நடக்காது. நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்த காரணமாக இருந்தவருக்கும், ஆட்சியை பாதுகாத்தவர்களுக்கும் துரோகம் என துரோகத்தின் மறு உருவமாக அவர் உள்ளார்" என்றார்.
செந்தில் பாலாஜி நல்ல நண்பர்
மேலும் பேசிய அவர், "செந்தில் பாலாஜி என்னுடைய நல்ல நண்பர். தற்போது அவரை பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. கூடாய் நட்பு கேடாய் முடியும் என்பதற்கு ஏற்ப அவரது கூடா நட்பு கேடாய் முடிந்துள்ளது" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |