சசிகலாவை சேர்ப்பது பற்றி ஓபிஎஸ் சொன்னது சரி! இபிஎஸ் 4 கால் பிராணி போல தவழ்ந்ததை அனைவரும் அறிவர்: டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமி தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார். அவரிடம் தடுமாற்றமும், பயமும் தெரிகிறது. அதனாலேயே வார்த்தைகளை பயந்து பயந்து பயன்படுத்துகிறார்.
சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தையே தெரிவித்து இருக்கிறார், அவர் எதையும் சிந்தித்து முடிவு எடுக்க கூடியவர் என நான் அன்றைக்கு சொன்னேன்.
எடப்பாடி பழனிச்சாமி 4 கால் பிராணி போல தவழ்ந்ததை அனைவரும் அறிவர், அவர் யாரால் முதல்வர் ஆனார் என்பது உலகிற்கே தெரியும். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லாமல் இருக்கலாம்.
அம்மாவின் அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே எங்களின் ஒரே நோக்கம். அதற்காகத் தொடங்கப்பட்டது தான் அ.ம.மு.க. விரைவில் ஜனநாயக ரீதியாகத் தேர்தலைச் சந்தித்து அ.தி.மு.க-வை மீட்டெடுப்போம் என கூறியுள்ளார்.