பிரித்தானியாவின் கிளைட் நதியில் படகு கவிழ்ந்து விபத்து: தொடரும் மீட்பு பணி
பிரித்தானியாவின் கிளைட் நதியில் இழுவை படகு ஒன்று கவிழ்ந்ததை தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படகு கவிழ்ந்து விபத்து
பிரித்தானியாவில் இழுவைப் படகு கவிழ்ந்ததையடுத்து கிளைட்( Clyde) நதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட போது அதில் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் வரை இருந்ததாக நம்பப்படுகிறது.
Sky News
படகு உல்லாச கப்பல் ஒன்றை துறைமுகத்திற்கு அழைத்து சென்ற போது இந்த விபத்தில் சிக்கியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் வேட்டை
விபத்து தொடர்பான ஆபாய எச்சரிக்கை மணி சரியாக 3:30 மணியளவில் எழுப்பபட்டவுடன், ஹெலன்ஸ்பர்க் RNLI லைஃப் படகு, பொலிஸார் மீட்பு படகுகள் மற்றும் பிற கண்காணிப்பு படகுகள் ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படகு விபத்துக்கு முன்னதாக அவை முற்றிலுமாக தண்ணீருக்குள் புரண்டதாக கூறப்படுகிறது.
Gordon McCracken
கடலோர காவல் படை மீட்பு ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல்படை மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி தேடுதல் நடவடிக்கைக்கு உதவியது.