தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்! - இன்று முதல் நடைமுறைக்குவரும் தடை
2021 (2022) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்தல் இன்று (ஜனவரி 18) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ம் திகதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், போலி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் மின்னணு அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் சுவரொட்டிகள், பதாகைகள் வெளியிடுதல் அல்லது அவற்றை வைத்திருப்பது போன்றவற்றுக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் நபர்கள் மீது பொதுத் தேர்வுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2021 (2022) க.பொ.த உயர்தரத்தை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகள் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளுக்கும் எதிர்வரும் முதலாம் திகதி நள்ளிரவு முதல் மார்ச் 05ம் திகதி வரை தடை விதிக்கப்படும்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 07ம் திகதி முதல் மார்ச் 05ம் திகதி வரை நடைபெறவுள்ளது.