பல தலைமுறைகளாக நிலத்திற்கு அடியில் வாழும் மக்கள்: ஏன் தெரியுமா?
தென்னாபிரிக்க ஒரு நகரமே நிலத்திற்குள் தான் தங்கி இருக்கிறது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இன மக்கள் வாழும் மட்மதா என்ற சிறிய நகரம் உள்ளது.
தெற்கு துனிசியாவின் டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இந்த நகரம் அமைந்துள்ளது.
பெர்பர் இன மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர்.
அவர்கள் அரேபியாவில் இருந்து துனிசியா நாட்டிற்கு குடிபெயர்ந்த போது மட்மதாவில் உள்ள வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாமல் நிலத்தின் அடியில் மக்கள் வாழத் தொடங்கினர்.
எளிய கைக்கருவிகளுடன் தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மணற்கல்லில் முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர்.
குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டப்பட்டு, நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை கொண்டு வருகின்றனர்.
இந்த தனித்துவமான ட்ரோக்ளோடைட்(troglodyte) கட்டுமானமானது பகலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவியுள்ளது.
ஆனால் 1960 களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் நிலத்தடி குடியிருப்புகள் கொஞ்சம் சேதமடைந்துள்ளது.
இருப்பினும் இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்து நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டு மக்கள் வசித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |