7 நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்: 17 மணி நேரம் போராடி மீட்ட பிரித்தானியர்கள்
துருக்கியில் 7 நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணை பிரித்தானிய தன்னார்வலர்கள் 17 மணி நேரம் போராடி, பின் மீட்டுக்கொண்டுவரும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
17 மணி நேரமாக பெண்ணின் சத்தத்தை வைத்து கண்டு பிடித்த பிரித்தானியர்கள்
துருக்கியின் Hatay மாகாணத்திலுள்ள கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த பெண் ஒருவரை, 17 மணி நேரமாக கேட்ட அவரது சத்தத்தை வைத்து மீட்டுள்ளார்கள் பிரித்தானிய தன்னார்வலர்கள் சிலர்.
ஒரு வாரமாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அந்தப் பெண் சிறிய துவாரம் ஒன்றின் வழியாக மீட்கப்பட்டதும் நிம்மதிக் குரல் எழுப்புவதை ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
WATCH: The dramatic rescue of a woman stuck in a collapsed building in Hatay, Turkey. Listen to the relief in her voice after being trapped for nearly a week.
— Foreign, Commonwealth & Development Office (@FCDOGovUK) February 12, 2023
The UK government funded @UK_ISAR_TEAM spent 17 hours tunnelling through wreckage, tracing her voice. pic.twitter.com/EzPjou553F