பிரித்தானிய இளம்பெண்ணின் ‘இதயத்தைத் திருடிய’ மருத்துவர்கள்: இது ஒரு திடுக் செய்தி
துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பிரித்தானியாவுக்குக் கொண்டுவந்த அவரது குடும்பத்தினருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
சுற்றுலா சென்ற குடும்பம்
இங்கிலாந்திலுள்ள Portsmouthஐச் சேர்ந்த பெத் மார்ட்டின் (Beth Martin, 28) தனது கணவரான லூக் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கடந்த மாதம் 27ஆம் திகதி துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென தனக்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதுபோல் தோன்றுவதாக கணவரிடம் பெத் கூற, அவரை லூக் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இரண்டு நாட்களில் பெத் உயிரிழக்க, மருத்துவர்கள் லூக் அவருக்கு விஷம் கொடுத்துவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
ஒரு வழியாக, போராடி பெத்தின் உடலை பிரித்தானியாவுக்குக் கொண்டு வந்த அவரது குடும்பத்துக்கு மற்றொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், பெத் எதனால் இறந்தார் என துருக்கி மருத்துவமனை கூறாததால், பிரித்தானியாவில் பெத்தின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, அவரது உடலில் இதயம் மாயமாகியிருந்தது தெரியவந்துள்ளது.
துருக்கி மருத்துவமனை மருத்துவர்கள், பெத்தின் இதயத்தைத் திருடியிருக்கிறார்கள்.
இந்நிலையில், மருத்துவர்களின் கவனக்குறைவால் பெத் உயிரிழந்திருக்கலாம் என்னும் கோணத்தில் தற்போது விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெத்தை இழந்து அவரது கணவர், 5 மற்றும் 8 வயதுடைய அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |