புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்கும் வெளிநாட்டவருக்கு சிறை
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்வோருக்காக ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் படகுகளை விற்கும் வெளிநாட்டவர் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆட்கடத்தல்காரர்களுக்கு படகு விற்கும் நபர்
துருக்கி நாட்டவரான Adem Savas (45) என்னும் நபர், ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பல உயிர்களை பலிவாங்கிய விபத்துக்களுக்கு காரணமாக அமைந்த சிறுபடகுகளை விற்கும் நபர் என தெரியவந்ததைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஆம்ஸ்டர்டாமில் கைது செய்யப்பட்டார்.

பெல்ஜியம் நாட்டில் வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்ட அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
துருக்கியிலிருந்து சிறுபடகுகளைக் கொண்டு வந்து, அவற்றை பிரான்சுக்குக் கொண்டுசேர்க்கும்வரை, அவற்றை ஜேர்மனியில் சேமித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் Adem Savas.
11 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், Adem Savasக்கு 74,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |