கால்பந்து மைதானம் முழுக்க பொம்மைகளை வீசிய துருக்கி ரசிகர்கள்! நெஞ்சை நெகிழவைக்கும் செயல்
துருக்கி பூகம்பத்தில் உயிர் பிழைத்த குழந்தைகளுக்காக ரசிகர்கள் ஆயிரக்கணக்கான பொம்மைகளை கால்பந்து மைதானத்தில் வீசிய நெகிழவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை Besiktas மற்றும் Fraport TAV Antalyaspor அணிகளுக்கு இடையேயான சூப்பர் லீக் போட்டிக்கு முன் துருக்கி கால்பந்து ரசிகர்கள் ஆயிரக்கணக்கான டெடி பியர்களை நன்கொடையாக வழங்கினர்.
துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திலிருந்து உயிர் பிழைத்த குழந்தைகளுக்கு நன்கொடையாக டெடி பியர் பொம்மைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொம்மைகளை போட்டியின் போது கால்பந்து மைதானத்தில் வீசப்பட்டது.
AP
தென்கிழக்கு துருக்கியில் பிப்ரவரி 6 அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் நேரத்துக்கு ஏற்ப, போட்டி 4 நிமிடங்கள் 17 வினாடிகளில் நிறுத்தப்பட்டது.
அப்போதுதான் வோடபோன் பார்க் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் அடைக்கப்பட்ட பொம்மைகளை ரசிகர்கள் மைதானத்திற்குள் மழை போல் பொழிந்தனர்.
?? Thousands of TeddyBear & toys were thrown on to the pitch on during a match in #Istanbul between #besiktas for #donation to #Turkey's child #earthquake survivors.#BesiktASK #turkeyearthquake2023 #deprem #RussiaInvadedUkraine #Ukraine #UkraineWillWin #Ukraina #UkraineWar pic.twitter.com/PZCi09dUtl
— Abdul Ahad (@OneAahad) February 27, 2023
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பதினொரு துருக்கிய மாகாணங்களின் உரிமத் தகடு எண்களுடன் ஸ்கோர்போர்டு திரை ஒளிரும் போது வீரர்கள் பொம்மைகளை சேகரிக்க விரைந்தனர்.
துருக்கி மற்றும் சிரியா முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட மக்களை பலிவாங்கிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு Besiktas அணியின் மூலம் பொம்மைகள் அனுப்பப்படும்.
Ali Atmaca/Anadolu Agency
பலியானவர்களில் கானா அணியின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் அட்சுவும் (Christian Atsu) ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பிப்ரவரி 18 அன்று தெற்கு துருக்கியில் அவர் வசித்து வந்த கட்டிடத்தின் கீழ் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
AP
Ali Atmaca/Anadolu Agency
Serhat Cagdas/Anadolu Agency
Serhat Cagdas/Anadolu Agency
Serhat Cagdas/Anadolu Agency
Ali Atmaca/Anadolu Agency