முன்பு பொதுக் கழிப்பறையில் வாழ்ந்தவர்... இன்று லண்டனில் புதிய உணவகம் திறக்க இருக்கும் கோடீஸ்வரர்
முன்பு ஒரு காலத்தில் ஏழ்மை காரணமாக பொதுக் கழிப்பறையை இரவு தூக்கத்திற்கு பயன்படுத்திய துருக்கிய கோடீஸ்வரருக்கு மத்திய லண்டனில் புதிய உணவகம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வறுமையில் தொடங்கிய வாழ்க்கை
லண்டனில் உள்ள தெற்கு மோல்டன் தெருவில் தொடர்புடைய உணவகம் திறக்கப்பட உள்ளது. 74 வயதான ஹுசைன் ஓசர் தமது புதிய உணவகத்திற்காக வெஸ்ட்மின்ஸ்டர் கவுன்சில் அனுமதியை பெற்றுள்ளார்.
Image: Google Maps
லண்டனில் இது அவருக்கு மூன்றாவது உணவகம் என்றே கூறப்படுகிறது. வறுமையில் தொடங்கிய அவரது வாழ்க்கை, ஒரு கட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களிடமிருந்து அச்சுறுத்தல்களைப் பெற வழிவகுத்ததாக அவர் கூறுகிறார்.
துருக்கியின் Tokat பகுதியில் பிறந்த ஹுசைன், ஏழ்மையின் வலியை நன்கு அறிந்தவர் என்பதுடன், வளர்ப்பு தாயாரின் கொலை முயற்சியில் இருந்து நூலிழையில் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி, தந்தையை கொல்ல தாயாரால் துப்பாக்கி வாங்கிவர அனுப்பப்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ள ஹுசைன், அந்த நிகழ்வுகளுக்கு பின்னர் தம்மை மொத்த குடும்பமும் கைவிட்டதாக தெரிவித்துள்ளார்.
5 நாட்கள் பேருந்தில் பயணித்து
பல ஆண்டுகள் பொதுக் கழிப்பறையில் வாழ்ந்ததாக கூறும் ஹுசைன், தினமும் ஒரு கிண்ணம் ட்ரிப் சூப் மற்றும் ஒரு சிறிய துண்டு ரொட்டியில் உயிர் பிழைத்தேன் என்றார். 21ம் வயதில், 5 நாட்கள் பேருந்தில் பயணித்து லண்டன் வந்து சேர்ந்ததாக கூறும் ஹுசைன்,
Credit: Mylondon
ஆங்கில மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகவே அப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். பின்னர். Mayfair பகுதியில் கபாப் கடை ஒன்றில் பணியாற்ற தொடங்கிய ஹுசைன், 1981ல் வங்கியில் இருந்து கடன் வாங்கி, அதே கபாப் கடையை 7,500 பவுண்டுகளுக்கு சொந்தமாக்கியுள்ளார்.
தற்போது லண்டனில் தமது மூன்றாவது உணவகத்தை திறக்கவிருக்கும் ஹுசைன் பிரித்தானியாவின் பல பகுதிகளில் உணவகங்களை திறந்து செயல்படுத்தி வருகிறார்.
தமக்கு பணம் முக்கியமல்ல என குறிப்பிட்டுள்ள ஹுசைன், மக்களை திருப்திப்படுத்த வேண்டும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே தமது எண்ணம் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |