பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் நடக்கும் அற்புதங்கள்! இவ்வளவா?
பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகள் பல கிடைக்கும்.
மஞ்சளில் இருக்கும் ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலுக்கு தீர்வாக கருதப்படுகிறது. பாலில் மஞ்சள் சேர்ப்பது தொண்டை புண், இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
முதுகெலும்பு
வலிகளுக்கு குறிப்பாக முதுகுவலிக்கு மஞ்சள் பால் சிறந்த தீர்வாகும். இது முதுகெலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தவும் உதவும்.
கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் உள்ளிட்ட மூட்டு மற்றும் எலும்பு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மஞ்சள் பால் நன்மை பயக்கும்.
medicalnewstoday
மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும்.
இதை தினமும் குடித்து வந்தால், சருமம் பளபளப்பாகும். `உலகப் பேரழகி கிளியோபாட்ரா மஞ்சள் கலந்த பாலில் குளித்ததால்தான் பளபளப்பாக இருந்தார்’ என்பார்கள்.
செய்முறை
ஒரு கிளாஸ் பாலில் 1/4 டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து பாலை நன்கு கொதிக்கவிடவும். பின்னர் பாலை வடிகட்டி, தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து இளம் சூடாகக் குடித்தால், மேலே உள்ள பலன்களைப் பெறலாம்.
foolproofliving