7 நாட்களில் தொப்பையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்தால் போதும்..!
தொங்கும் தொப்பைக்கு பல காரணங்கள் உண்டு. பெண்களில், ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக வயிறு தொங்கத் தொடங்குகிறது.
வயிற்றில் உள்ள கொழுப்பு மோசமானதாக இருப்பது மட்டுமல்லாமல், பல நோய்களையும் உண்டாக்கும்.
உடலில் உள்ள பல ஹார்மோன்கள் செரிமானம், எடை மற்றும் பிற செயல்பாடுகளை பாதிக்கிறது. இந்த ஹார்மோன்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும்போது, அது உடலை பல வழிகளில் பாதிக்கிறது.
பெண்களின் PCOS தொப்பை இதில் ஒன்று. தொங்கு தொப்பையால் உங்களுக்கும் தொந்தரவு இருந்தால், நீங்கள் இந்த முறையின் மூலம் அதை குறைக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வொம்.
இஞ்சி மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீர்
இஞ்சி மற்றும் மஞ்சள் தண்ணீர் தொப்பையை குறைக்க உதவுகிறது. இதை குடிப்பதன் மூலமாக உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை சீக்கிரமாக குறைகிறது.
மஞ்சள் மற்றும் இஞ்சி இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.
இந்த இரண்டு பொருட்கள் அடங்கிய தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், செரிமானம் வலுவடைவதோடு, கொழுப்பும் விரைவாக கரையும்.
அரை அங்குல இஞ்சி மற்றும் ஒரு சிறிய துண்டு பச்சை மஞ்சளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
பாதியாகக் குறையும் வரை கொதிக்க விட்டு வெறும் வயிற்றில் குடித்து வந்தால், தொப்பை கொழுப்பை சில நாட்களில் குறைக்கலாம். இதனுடன் உணவு மற்றும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |