நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
நீண்ட நாட்கள் கழித்து ஏசியை உபயோகப்படுத்தினால் எந்தெந்த விடயங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் கோடை காலம் போலவே வெயில் வெளுத்து வாங்குகிறது.
இந்நிலையில், நீங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்த ஏசியை ஆன் செய்வதற்கு முன்பு சில விடயங்களை கவனிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டியவை
* நீங்கள் நீண்ட நாட்கள் கழித்து ஏசியை உபயோகப்படுத்துவதற்கு முன்பு ஏசி யூனிட்டை சரியாக பார்த்து, அதில் தூசி, குப்பைகள் அடைத்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும். மேலும், பூச்சிகள், ஏதேனும் உடைந்த பாகங்கள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
* ஏசியில் உள்ள ஃபில்டர்கள் தான் காற்றின் தரத்தை பராமரித்து ஏசியை திறம்பட செயல்பட வைக்கிறது. இதனால் ஃபில்டர்களில் ஏதேனும் தூசிகள் அடைத்திருந்தால் காற்றோட்டத்தைத் தடுத்து, ஏசியின் செயல்திறனைக் குறைக்கலாம். இதனால் நீங்கள் ஏசி ஃபில்டரை மாற்றுவது நல்லது.
* AC thermostat சரியான குளிரூட்டும் முறை மற்றும் வெப்ப நிலையில் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் AC thermostat பற்றரிகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
* நீண்ட நாட்களுக்கு பிறகு ஏசியை ஆன் செய்த பிறகு உடனே வெப்பநிலையை குறைக்காமல் படிப்படியாக குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் திடீர் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களால் ஏசி பழுதாகும் அபாயம் குறைகிறது.
* ஏசியை ஆன் செய்தவுடன் யூனிட்டில் இருந்து தேவையில்லாத சத்தங்கள், அதிர்வுகள் மற்றும் துர்நாற்றம் வீசினால் மெக்கானிக்கை அழைத்து வந்து சரிபார்க்கவும்.
* உங்களது ஏசியை வருடத்திற்கு ஒரு முறையாவது நிச்சயம் யூனிட் சர்வீஸ் செய்ய வேண்டும். நீங்களே ஏசியை சுத்தம் செய்யாமல் அனுபவம் நிறைந்தவர்கள் செய்தால் உங்களது ஏசி பாதுகாப்பாகவும், நீடித்தும் உழைக்கும்.