பிரித்தானியாவின் இளம் இந்திய வம்சாவளி மேயர் - 23 வயதில் சாதித்த துஷார் குமார்
பிரித்தானியாவின் இளம் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை துஷார் குமார் பெற்றுள்ளார்.
துஷார் குமார்
பிரித்தானியாவின் போர்ஹாம்வுட்டில் உள்ள ஃபேர்வே ஹாலில் நடைபெற்ற நகர சபையின் வருடாந்திர மேயர் பதவியேற்பு விழாவில் தொழிலாளர் கட்சி கவுன்சிலரான துஷார் குமார்(tushar kumar) எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் மேயராக பதவியேற்று கொண்டார்.

23 வயதில் மேயரானதன் மூலம் மூலம் பிரித்தானியாவின் இளம் வயது இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை துஷார் குமார் பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியான துஷார் குமாரின் தாயார் பர்வீன் ராணி முன்னதாக துணை மேயராக இருந்துள்ளார்.

கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்து வந்த போதே, 20 வயதில் நகர்மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது பதவி விலகும் மேயர் டான் ஓசரோவின் கீழ் துணை மேயராக துஷார் குமார் ஒரு முழுமையான பதவிக்காலம் பணியாற்றியுள்ளார்.

இளைஞர் ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் அணுகல் மற்றும் சமூக ஒற்றுமைக்காக அயராது குரல் கொடுத்ததன் மூலம் வாக்காளர்களிடையே கவனம் ஈர்த்துள்ளார்.
மேலும், இங்கிலாந்தின் வேலை மற்றும் ஓய்வூதியத் துறைக்குக் கொள்கை ஆலோசகராகவும், தேசிய LGBTQ தொண்டு நிறுவனத்தில் ஆராய்ச்சி ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரித்தானிய இந்திய குழந்தைகளுக்கு ஹிந்தி வகுப்பு எடுத்து வந்தார்.
இதே போல், போர்ஹாம்வுட்டில் நடைபெறும் முக்கிய பல்கலாச்சார நிகழ்வுகளின் மைய அமைப்பாளராக இருந்து இந்திய சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி மற்றும் ஹோலி போன்ற கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
பிரித்தானியாவின் போர்ஹாம்வுட்டில் உள்ள ஃபேர்வே ஹாலில் நடைபெற்ற நகர சபையின் வருடாந்திர மேயர் பதவியேற்பு விழாவில் தொழிலாளர் கட்சி கவுன்சிலரான துஷார் குமார் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் மேயராக பதவியேற்று கொண்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |