அம்மா திட்டியதால் தூக்கிய தொங்கிய சிறுவன்! அதிர்ச்சி சம்பவம்
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் 14 வயது சிறுவன், தாய் திட்டியதால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கண்டித்த தாய்
தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயர்புரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது 14 வயது மகனான ஜோ விஷ்வா 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கோடை விடுமுறையால் வீட்டில் இருந்த விஷ்வாவுக்கும், அவரது மூத்த சகோதரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு வந்த அவர்களின் தாய், மகன் ஜோ விஷ்வாவை கண்டித்து திட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.
தூக்குபோட்டுக்கொண்ட மாணவர்
இதனையடுத்து ஜோ விஷ்வா வீட்டின் பின்பக்க அறைக்கு சென்றுள்ளார். தாய் திட்டியதால் மனமுடைந்த அவர், அங்கே தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
பின்னர் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றினர்.
மேலும், ஜோ விஷ்வாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |