25 வயது தான்! மாரடைப்பால் உயிரிழந்த இளம் நடிகர்
சமீபகாலமாக மாரடைப்பு காரணமாக திரைத்துறையில் பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தற்போது 25 வயதே ஆன தமிழ் மற்றும் ஹிந்தி தொலைக்காட்சி நடிகரான பவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவன். இவர் நாகராஜு மற்றும் சரஸ்வதி தம்பதியின் மகனாவார், மும்பையில் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிகாலை 5 மணியளவில் காலமானார்.
இவரது இறப்பு இவரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து பவனின் உடல் கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அவரது குடும்பத்தினர்களால் இறுதி சடங்கு செய்யப்படுகிறது.
மாண்டியா எம்எல்ஏ எச்.டி.மஞ்சு, முன்னாள் எம்எல்ஏ கே.பி.சந்திரசேகரா, முன்னாள் அமைச்சர் கே.சி.நாராயண கவுடா, முன்னாள் எம்எல்ஏ பி.பிரகாஷ், டிஏபிசிஎம்எஸ் தலைவர் பி.எல்.தேவராஜு, உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் புக்கனகெரே விஜய ராமகவுடா, தொகுதி காங்கிரஸ் தலைவர் பி.நாகேந்திர குமார், ஜேடிஎஸ் தலைவர் அக்கிஹெப்பலு ரகு, யுவ ஜனதா தளம் மாநில பொதுச் செயலாளர் குருபஹள்ளி நாகேஷ் உள்ளிட்ட பலர் பவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |