திடீரென கட்டியணைத்த பிரபலம்: அதிர்ந்து நின்ற ராணி கமீலா
TV personality has been criticized online after she kisses end hugs Queen Camilla: தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் திடீரென ராணி கமீலாவை கட்டியணைத்த விடயம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

பாடகியும், தொலைக்காட்சிப் பிரபலமுமான ஜெரி என்னும் பெண், மரபுகளை மீறி திடீரென ராணி கமீலாவைக் கட்டியணைத்தார்.
திடீரென கட்டியணைத்த பிரபலம்
மன்னர் சார்லசின் மனைவியான ராணி கமீலா நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது, பாடகியும், தொலைக்காட்சிப் பிரபலமுமான ஜெரி என்னும் பெண், ராணி கமீலாவின் கன்னங்களில் முத்தமிட்டார்.
அத்துடன், திடீரென அவர் கமீலாவைக் கட்டியணைக்க, ராணி திகைத்து நிற்பதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் தெளிவாகக் காணமுடிகிறது.

இந்நிலையில், மரபுகளை மீறி ஜெரி ராணியைக் கட்டியணைத்த விடயம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
உண்மையில், ஒருவர், ராணியைக் கட்டியணைப்பது சட்டப்படி குற்றம் அல்ல. என்றாலும், ராஜ குடும்ப உறுப்பினர்கள் அனுமதித்தாலோழிய, அல்லது, அவர்களே தங்களை சந்திக்க வந்த நபரை நோக்கி கை குலுக்க கை நீட்டனாலோ அன்றி, யாரும் அவர்களை தொடுவதில்லை என்பது ஒரு மரபாகப் பின்பற்றப்பட்டுவருகிறது.
அப்படியிருக்கும் நிலையில், ஜெரி தானாக ராணியைக் கட்டியணைக்க, பலரும் ஜெரியை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.