தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த தவெக
tvk announced candidates for dharapuram and madurantakam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவெக
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில், மதுராந்தகத்தில் K.மரகதம் குமரவேல் போட்டியிடுவார்கள் எனவும், தாராபுரத்தில் சத்தியபாமா போட்டியிடுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.
இருவரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கே தவெக மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
— TVK Vijay (@TVKVijayHQ) September 10, 2026
திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |