கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி
கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கடிதம் எழுதி வைத்து தவெக நிர்வாகி உயிரை மாய்த்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறது.
இந்த சம்பவத்தில், சிபிஐ விசாரணை அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் எனக்கோரி தவெக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தவறான தகவல்களை பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், யூடியூபர் ஃபெலிக்ஸ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் திமுகவின் பின்னணி இருப்பதாகவும், வேண்டுமென்ற சிறிய இடம் ஒதுக்கப்பட்டது, போதிய பொலிஸ் பாதுகாப்பு இல்லை, மின்சாரம் நிறுத்தப்பட்டது, வேண்டுமென்றே கூட்டத்தில் ஆம்புலன்ஸ் என பல்வேறு குற்றச்சாட்டுகளை தவெகவினர் எழுப்பி வருகின்றனர்.
தவெக நிர்வாகி விபரீத முடிவு
இந்நிலையில், கரூர் சம்பவத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி இருப்பதாக தவெக நிர்வாகி ஒருவர் கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்துள்ளார்.
உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையிலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி, வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான ஐய்யப்பன்.
விற்பட்டு கிளை செயலாளராக உள்ள ஐய்யப்பன் சென்னையில் வசித்து வந்துள்ளார். தனது தாயை பார்ப்பதற்காக 3 நாட்கள் விழுப்புரம் சென்றுள்ளார்.
அப்போது விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட செய்திகளை தொடர்ந்து பார்த்து அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவர் எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் "இதற்கு முக்கிய காரணம் வி.செந்தில் பாலாஜி – வி.ஐயப்பன். கரூர் மாவட்டத்தில் விஜய் வருகை போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. அதில் விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தார்கள்.
செந்தில் பாலாஜி அவர்கள் நூதன முறையில் நெருக்கடி கொடுத்து, செந்தில் பாலாஜி மூலமாக இந்த துயர சம்பவம் நடைபெற்றது. போலீஸும் இதற்கு உடந்தை. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். என் உயிர் ஐயப்பன். தமிழக வெற்றிக் கழக செயலாளர், த.வெ.க கிளை செயலாளர்" என்று எழுதப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |