கரூர் சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி - வெளியான சந்தேகத்திற்குரிய காணொளிகள்
கரூரில் நேற்று (செப் 27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியதில், இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்துயரச் சம்பவம் தொடர்பாக பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பும் பல காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கூட்டத்திற்குள் திடீரென 2 ஆம்புலன்ஸ் எதற்காக வந்தது, விஜய் பேச தொடங்குவதற்கு முன் அப்பகுதியில் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது ஏன் என பல கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், அரசு தரப்பின் மீதும், மற்றும் சம்பவத்தின்போதே சன் தொலைக்காட்சியில் வெளியான செய்திகள் குறித்தும் பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
கரூரில் நேற்று நடந்தது விபத்து அல்ல திட்டமிடப்பட்ட சதி எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற பல காட்சிகள் கொண்ட காணொளி தொகுப்பை இங்கே காணலாம்.