தவெக 2026 தேர்தல் அறிக்கை - பிரத்தியேக இணையதளம் அறிமுகம்
2026 தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை வழங்க தவெக பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
2026 தேர்தல் அறிக்கை
ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், செய்ய உள்ள திட்டங்கள் குறித்து தேர்தல் அறிக்கையாக வெளியிடுவார்கள்.
இந்த தேர்தல் அறிக்கைகள் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உருவாக்கப்படும். இது தேர்தலில் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

ஆளுங்கட்சியான திமுக, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையிலான 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த குழு மக்களிடம் கருத்துக்களைக் கேட்டு வருகிறது.
மேலும், https://www.dmk.in/ta/manifesto2026 என்ற இணையதளத்தின் மூலம் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சியான அதிமுக, நகர்ப்புற பேருந்துகளில் ஆண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை 2 கட்டங்களாக தற்போது வரை வெளியிட்டுள்ளது.

திருச்சியில் பிப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற உள்ள மாநாட்டில் நாம் தமிழர் கட்சி 234 வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளது. விரைவில் தேர்தல் அறிக்கையையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையதளத்தை அறிமுகப்படுத்திய தவெக
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதல் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மீதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தவெக தலைவர் விஜய் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்து, இந்த குழு தமிழ்நாடு முழுவதும் பயணித்து மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் என அறிவித்தார்.
நம் காலம் வருகிறது!
— TVK Party HQ (@TVKPartyHQ) February 5, 2026
வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கு இணங்க, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டியவை குறித்துப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை அனுப்பலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள…
தற்போது பொதுமக்கள் தேர்தல் அறிக்கை தொடர்பாக தங்கள் பரிந்துரைகளை https://tvkmanifesto2026.com என்ற பிரத்யேக இணையதளத்தில் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாகப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை இணையத்தளத்தின் வாயிலாகக் கழகத்திற்குத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அந்த இணையத்தளமானது ஒரே நேரத்தில்…
— TVK Party HQ (@TVKPartyHQ) February 5, 2026
ஒரே நேரத்தில் அதிகளவிலான பயனர்கள் பயன்படுத்தப்படுவதால் இணையதளம் ஸ்தம்பித்துள்ள நிலையில் tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |