தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களித்தார்! பரபரப்பான வாக்குச்சாவடி
இந்தியாவின் 18வது ஜனநாயக தேர்தல் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாக்குப்பதிவை நிறைவு செய்தார்.
18வது மக்களவை தேர்தல்
இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Tamil Nadu: Actor and Tamilaga Vettri Kazhagam president Vijay casts his vote at a polling booth in Neelankarai, Chennai#LokSabhaElections2024 pic.twitter.com/rTtu4tGZJy
— ANI (@ANI) April 19, 2024
இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தலும் நடைபெறுகிறது.
நடிகர் விஜய் வாக்குப்பதிவு
இந்நிலையில், இந்தியாவின் 18வது ஜனநாயக தேர்தல் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாக்குப்பதிவை நிறைவு செய்தார்.
படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்று இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் விஜய்யின் வருகையையொட்டி ரசிகர்கள் வாக்குச்சாவடியை பெரும் அளவு சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அத்துடன் நடிகர் விஜய்யின் கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு பேண்டேஜ் ஓட்டிய இருந்த நிலையில், அதை ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |