இளம் தோழர்களே உங்களை கை கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்: தவெக தலைவர் விஜய்யின் பதிவு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு, மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என கூறி பதிவிட்டுள்ளார்.
வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு
கோயம்புத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெற்றது.
அப்போது கட்சித்தலைவர் விஜய்யின் பேரணி வாகனத்தின் மீது தொண்டர்கள் சிலர் ஏறியது விமர்சனத்திற்குள்ளானது.
அதேபோல் சிலர் விஜய்யின் காரை பின்தொடர்ந்து சென்றதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விஜய்யின் அன்புக்கட்டளை
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இதுதொடர்பாக தனது தொண்டர்களுக்கு அன்புக்கட்டளை விடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை, உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I Love you Kovai and Kongu Thangams.
ஆனால், எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாகத்தான் இருக்கணும்... எல்லாத்துக்கும் மேலே உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்...நீங்கதான் எனக்கு Precious... இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல...
உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்... உங்க அன்ப நான் மதிக்கிறேன்...இனி எப்பவும் மதிப்பேன்...அதேபோல் நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது.." என தெரிவித்துள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 30, 2025
மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |