கரூரை உலுக்கிய தவெக பரப்புரை: தன்னிலை விளக்க வீடியோ வெளியிடும் விஜய்?
கரூர் பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து தன்னிலை விளக்க வீடியோ ஒன்றை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ வெளியிடும் விஜய்
கரூரில் நேற்று நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரையில் 40 பேர் வரை உயிரிழந்து இருப்பது இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் நேற்று இரவு மற்றும் இன்று காலை என உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கரூர் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னிலை விளக்க வீடியோ ஒன்றை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த தன்னிலை விளக்கத்தில் உயிரிழப்புகள் தொடர்பாக CBI விசாரணை வேண்டும் என்று கோரிக்கையையும் விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |