எங்கள் கொள்கைத் தலைவர்.., பெரியாருக்கு மரியாதை செலுத்திய விஜய்
தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அரசியல் தலைவர்கள் புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜய் மரியாதை
தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தந்தை பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |