ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.., நிவாரண உதவிகள் வழங்கிய தவெக தலைவர் விஜய்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார்.
நிவாரண உதவி வழங்கிய விஜய்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களை வழங்கியும் வருகின்றன.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்னை பனையூரில் தவெக அலுவலகத்திற்கு வரவழைத்தார்.
பின் அவர்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்களை விஜய் வழங்கினார்.
நிவாரண பொருட்களில் வேஷ்டி, சட்டை, பெட்ஷீட் , மளிகை பொருட்கள் என ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |