அடங்கிப்போற ஆளா? இதுவரை தமிழ்நாடு பார்க்காத தேர்தல் - தவெக தலைவர் விஜய்
தவெக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆவேசமாக பேசிய கட்சித் தலைவர் விஜய், தான் அழுத்தத்திற்கு பயப்படுகிற ஆள் இல்லை என்று கூறினார்.
தவெக தலைவர் விஜய்
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய தவெக தலைவர் விஜய், "நம்முடைய இந்த அரசியல் பயணத்தில் மிக மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். நான் ஏன் இதை இவ்வளவு அழுத்தமாக கூறுகிறேன் என்றால்; ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? இந்த அழுத்தத்திற்கு எல்லாம் அடங்கிப்போற ஆள இந்த ஆளு?
அப்படியெல்லாம் நடக்காது! நம்மகிட்ட நடக்கவே நடக்காது. அழுத்தம் நமக்கில்லை, மக்களுக்கு. தமிழ்நாட்டை இதற்கு முன் ஆண்டவர்கள் பாஜக-வுக்கு அடிமையாக இருந்திருக்கிறார்கள். தற்போதைய ஆட்சியாளர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்" என்றார்.
மேலும் தேர்தல் குறித்து பேசிய அவர், "இதுவரை தமிழ்நாடு பார்க்காத வித்தியாசமான தேர்தல். வரும் தேர்தலை எப்படி என கணிக்க முடியாத சூழல் உள்ளதாக பலர் கூறுகிறார்கள். ஆனால், மக்கள் கணித்து முடித்துவிட்டார்கள். மக்கள் மனதை புரிந்து வைத்திருக்கின்ற நமக்கு நன்றாக தெரியும். உங்களோட நான் இருக்கிறேன்" என தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |