பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் வெற்றி
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
பல்வேறு தொகுதிகளில் வெற்றி விவரங்கள் தெரியத்தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றுள்ளது.

குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க ஸ்டாலினை தோற்கடித்து தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றிபெற்றுள்ளார்.
இந்நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் 1,00,582 வாக்குகள் பெற்று 44,583 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் 82,885 வாக்குகள் பெற்று 26,432 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |