நாம் தமிழர், விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு வாழ்த்து: TVK கட்சி தலைவர் விஜய் அறிக்கை
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு மாநில கட்சி அந்தஸ்தை பெற்ற நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு TVK கட்சி தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநில கட்சி அந்தஸ்து
சமீபத்தில் வெளியான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தி.மு.க உடன் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும், தங்களது தனி சின்னத்தில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் தொல்.திருமாவளவன் அவர்களின் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.
அதைப்போல சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 8 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றது, இதன் மூலம் நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.
TVK கட்சி தலைவர் விஜய் வாழ்த்து
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி அரசியலில் காலெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய் மாநில கட்சி அந்தஸ்தை பெற்ற நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) June 7, 2024
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |