விஜய் முதல்வர் ஆனதால் ஜலபிரதட்சணம் - வேண்டுதலை நிறைவேற்றிய தவெக எம்எல்ஏ
தவெக எம்எல்ஏ ஜலபிரதட்சணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
ஜலபிரதட்சணம் செய்த தவெக எம்எல்ஏ
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

மே 10 ஆம் திகதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அதன் பின்னர் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்.
முன்னதாக அதிமுகவில் பயணித்து வந்த இவர், 2011 சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனையடுத்து சமீபத்தில் தவெகவில் இணைந்த இவர், 2026 சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் வெங்கடேசனை 2,678 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

தவெக தலைவர் விஜய் முதலமைச்சரானால் ஜலபிரதட்சணம் செய்வதாக வேண்டியிருந்தார்.
விஜய் முதலமைச்சர் ஆன நிலையில், கிணறு ஒன்றில் தவெக கொடியுடன் தண்ணீரில் மிதந்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.