தமிழ்நிலக் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்- விஜய் வாழ்த்து
முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மிகவும் உகந்த நாளாக திகழ்வதுதான் தைப்பூச நாள்.
தமிழகம் முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நாளில் அனைத்து ஆலயங்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.
பெரும்பாலான பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தைப்பூசத் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
தனித்துயர்ந்த
— TVK Vijay (@tvkvijayhq) February 11, 2025
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |