தவெகவில் ஜான் ஆரோக்கியசாமி தான் எல்லாமா? தவெக நிர்வாகி ஸ்ரீதரன் விளக்கம்(வீடியோ)
தவெகவில் ஜான் ஆரோக்கியசாமி கருத்தை தான் விஜய் கேட்கிறாரா என்ற கேள்விக்கு தவெக நிர்வாகி ஸ்ரீதரன் விளக்கமளித்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி
கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் ஒரு மாத காலம் அமைதியாக இருந்த தவெக தலைவர் விஜய் மீண்டும், சேலத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் கருத்துக்களை மட்டுமே தவெக தலைவர் விஜய் கேட்டு, அதன்படியே செயல்பட்டு வருவதாகவும், பல விடயங்கள் விஜய்யின் கவனத்திற்கு செல்வதை ஜான் தடுப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சமீபத்தில் தவெகவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரும் இது போன்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
இந்நிலையில், ஜான் ஆரோக்கியசாமி பேச்சை மட்டுமே கேட்டு விஜய் செயல்படுகிறாரா, விஜய்யின் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரங்கள், கட்சியின் சின்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தவெக நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏவுமான மருத்துவர் ஸ்ரீதரன் பேசியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |