விஜய் ரசிகர்கள் கல்லால் கூட அடிக்கக்கூடும்.., ஏற்கனவே இருக்கும் TVK கட்சியின் தலைவர் பேச்சு
விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் கூட அடிக்கக்கூடும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.
கல்லால் கூட அடிக்கக்கூடும்
அப்போது பேசிய அவர், "சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது. ஆனால், 50 லட்சம் உறுப்பினர்கள் அந்த கட்சியில் இணைந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
மேலும், கட்சியின் உறுப்பினராக சேர்க்க அறிமுகப்படுத்திய இணையதளம் முடங்கிவிட்டதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டில் கூத்தாடிகளை கொண்டாடுகின்ற மனநிலையை உடைக்க வேண்டும். ஒரு வேளை விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் கூட அடிக்கக்கூடும்" என்று கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை என்ற கட்சி TVK என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியும் TVK என்று தான் அழைக்கப்படுகிறது.
விஜய் எப்படி அவரது கட்சியை TVK என அழைக்கலாம் என்று வேல்முருகன் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |