என்னை போல் செய்ய உங்களுக்கு தில்லு இருக்கா? அரசியல்வாதிகளுக்கு சவால் விட்ட விஜய்
சேலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
விஜய் சேலம் பரப்புரை
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், தவெகவின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், courage தான் எல்லாத்துக்கும் ஒரு அடிப்படை. கரேஜ் தான் எல்லாத்துக்கும் ஒரு சக்தி. அப்படிப்பட்ட அந்த சக்தி எதில் இருந்து ஆரம்பிக்கிறது தெரியுமா?

நம்மைக் குறைத்து மதிப்பீடு செய்யும்போது, நம்மை ஏளனமாகப் பார்க்கும் போது ஆரம்பிக்கிறது. நாம் யார் என்று நிருப்பிக்க வேண்டும், நாம் யார் என்று காட்டவேண்டும் என்று உத்வேகம் உங்களுக்குள் வரும்.
ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏபனையூரை விட்டு வெளியே வா என்று சொல்கிறவர்களுக்கு என் வீடு எதுவென்று தெரியுமா? முதலில் என் வீடு எங்கிருக்கிறது என்றாவது தெரியுமா?
என்னைச் சீண்டிப் பார்க்கிறதாக நினைத்துக் கிண்டலும், கேலியுமாகப் பேசுகிறவர்களுக்குச் சொல்கிறேன். இந்த தமிழ்நாடு தமிழ்நாடு என்று சொல்கிறார்களே அது மற்றவர்களுக்கு வேண்டுமானால் மாநிலமாக இருக்கலாம்.
ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் என் தாய்நாடான தமிழ்நாடு தான் என் வீடு. என் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? என் குடும்பத்தில் 8 கோடி பேர் இருக்கிறார்கள்.

மற்ற கட்சிகள் மாநாடு நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் நான் மக்களை சந்திக்கவோ அல்லது மக்கள் என்னை சந்திக்கவோ இடம் கொடுக்க மாட்டார்கள்; கொடுக்கவும் விடமாட்டார்கள். உங்களிடம் ஓட்டு கேட்காமல், நீதி கேட்டும் வந்துள்ளேன்.
காசு கொடுத்து ஓட்டு வாங்கிறலாம்னு கனவு காண்கிறார்கள், அது இந்த விஜய் வந்ததுக்கு அப்றம் நடக்கவே நடக்காது.
வண்டி வண்டியாக கொண்டுவந்து பணத்தை கொட்டுவார்கள், பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்கள் பணம் தான். பணத்தை வாங்கி விட்டு, அவர்களின் காதுகளில் விசிலை ஊதி அனுப்புங்கள்.
உங்களுக்கு ஒரு சவால்
நாம அரசியலுக்கு வந்ததுக்கு தனிப்பட்ட வன்மமோ, கோபமோ கிடையாது வெறுப்பு அரசியல் செய்ய வரவில்லை. மக்களுக்கான நன்றிக்கடனுக்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.
அடுத்தவங்க ஆரம்பிச்ச அரசியல் கட்சியில் அரசியல்வாதியாக உள்ள உங்களுக்கு ஒரு சவால். என்னை போல் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் வாக்கு வாங்கி காட்ட முடியுமா? அதுக்கு உங்களுக்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா?

30 வருடமாக மக்கள் இயக்கமாக இருந்து இப்போது அரசியல் கட்சியாக உருவெடுத்து 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் களத்தில் முதன்மை கட்சியாக வளர்ந்துள்ளது.
மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் ஏன் அரசு ஊழியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துறாங்க.
மக்கள் மகிழ்ச்சியா இருந்தால் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். இவர்களின் ஆட்சியில் போராட்டம் நடத்தி கொண்டாடுகிறார்கள்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |