வேளாண் கடன் ரத்து; இலவச கல்வி - தஞ்சாவூரில் விவசாயிகளுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்
தஞ்சாவூரில் பேசிய தவெக தலைவர் விஜய் விவசாயிகள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் விஜய் பேச்சு
தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் பேசிய அவர், "சென்னையில டெல்லி டெல்லினு கூவுறதும், அடிக்கிற கொள்ளைக்கு ரைடு வந்துட்டா டெல்லிக்கு வெள்ளைக்குடை பிடிக்குறதும்.. இதுலாம் யாருனு நான் சொல்லி தான் தெரியனுமா உங்களுக்கே தெரியும்.

எனக்கும் மக்களுக்குமான உறவு இயற்கையாகவே அமைந்த உறவு. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது Election. எனக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் இது Emotion.
ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி என்று சிறுவர்கள் கூட பேச ஆரம்பித்துவிட்டார்கள். கிரிக்கெட்டில் விசில் போடுவது சிஎஸ்கே, தமிழகத்தில் விசில் போடப் போவது TVK தான்.
நான் விவசாயி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றாலும் அவர்கள் படும் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
தவெக ஆட்சி அமைந்தவுடன் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சனைகளில் விவசாயிகளின் பிரச்சனையும் ஒன்று.
தேர்தல் வாக்குறுதிகள்
நாம் ஆட்சிக்கு வந்தால், உரக்கட்டுப்பாடு பிரச்சினை சரி செய்யப்படும்.
5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் வாங்கிய வேளாண் பயிர் கடன் ரத்து செய்யப்படும்.
5 ஏக்கருக்கு அதிகமாக நிலமுள்ள விவசாயிகள் வாங்கிய வேளாண் பயிர் கடனில் 50 சதவீதம் வரை ரத்து செய்ய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கபப்படும்.
5 ஏக்கர் வரை நிலமுள்ள அல்லது நிலமற்ற விவசாயிகள் குடும்பத்தில் ஒருவர் கூட மாநில அல்லது மத்திய அரசு வேலையில் இல்லாமல் இருந்தால் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் கல்வி செல்வது முழுவதையும் அரசு ஏற்கும்.
போதுமான கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஏற்ற இறக்க கமிஷன் பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும். அரிசி தவிர அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விற்கப்படும்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |