விஜய்யின் ஒரே முடிவு இதுதான்: அச்சம் வேண்டாம் - ஊடகவியலாளர் ஷபீர் அகமது (காணொளி)
கரூர் துயர சம்பவத்தையடுத்து த.வெ.க தலைவர் விஜய் எடுத்துள்ள முடிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷபீர் அகமது பேசியுள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய்
அவர் கூறுகையில், கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை விஜய் சந்திக்காமல், அவரால் அடுத்தகட்டமாக எதுவுமே செய்திருக்க முடியாது.
நியாயப்படி இந்த குடும்பங்களை நீங்கள் கரூரில்தான் சந்தித்திருக்க வேண்டும்; அவர்களுடன் இருந்திருக்க வேண்டும்.
முதலிலேயே த.வெ.க கட்சியினர் அவர்களுடன் நின்றிருக்க வேண்டும். ஆனால், அதனை த.வெ.க செய்ய தவறியிருக்கிறது.
அதன் பிறகு அவர்களால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நீண்ட காலமாகிவிட்டது. நீங்கள் ஒரு பக்கம் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள், ஒரு பக்கம் விசாரணை கேட்கிறீர்கள், ஒரு பக்கம் பெரிய சந்தேகங்கள் இருக்கிறது என்கிறீர்கள்.
நீங்கள்தான் அவர்களை நேரில்போய் பார்த்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் வந்து உங்களை பார்த்துவிட்டு போகிறார்கள் என்பது விசித்திரமான விடயம்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |