புதுச்சேரி அரசை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் - விஜய் பேச்சு

Vijay DMK Puducherry Thamizhaga Vetri Kazhagam
By Balamanuvelan Dec 09, 2025 07:27 AM GMT
Report

 திமுகவை நம்பாதீர்கள், அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள் என புதுச்சேரி கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார்.

தவெக புதுச்சேரி பொதுக்கூட்டம்

புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில், இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

புதுச்சேரி அரசை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் - விஜய் பேச்சு | Tvk Vijay Slams Bjp And Dmk In Puducherry

இதில் பேசிய விஜய், "ஒன்றிய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். ஆனால் நமக்கு அப்படி கிடையாது. நாம எல்லோரும் ஒன்னுதான்.

வேற வேற வீட்ல, வேற வேற ஊர்ல, வேற மாநிலத்துல இருக்கிறதுனால நாம் எல்லாரும் சொந்தங்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? அது எப்படி முடியும்?

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகானு நம்ம வகையறா எங்க இருந்தாலும் அவங்க நம்ம உறவுதான். 

விஜய்யின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் - என்ன நடந்தது?

விஜய்யின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் - என்ன நடந்தது?

வேறு கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து பாரபட்சம் பார்க்காமல் புதுச்சேரி அரசு நடந்துள்ளது. புதுச்சேரி அரசுக்கும், CM Sir அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. 

புதுச்சேரி அரசை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் - விஜய் பேச்சு | Tvk Vijay Slams Bjp And Dmk In Puducherry

இதை பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள். மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள்.

1977 ஆம் ஆண்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால் அதற்கு முன்னாடியே 1974 ஆம் ஆண்டிலே இங்கே அவர்களின் ஆட்சி அமைந்தது.

நமக்காக வந்தவர் எம்ஜிஆர், அவரைத் தமிழ்நாட்டில் மிஸ் பண்ணிடாதீங்கனு அலெர்ட் பண்ணதே புதுச்சேரி மக்கள்தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மளால மறக்க முடியுமா?

தமிழ்நாடு போலவே என்னை 30 ஆண்டுகளாக தாங்கி பிடித்திருக்கும் புதுச்சேரி மக்கள். நான் தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன். இது எனது கடமை. 

புதுச்சேரியை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு

புதுச்சேரி அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எந்த விஷயத்திலும் கண்டு கொள்ளவில்லை என்பது மக்களுக்கே தெரியும்.

புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பலமுறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  

புதுச்சேரி அரசை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் - விஜய் பேச்சு | Tvk Vijay Slams Bjp And Dmk In Puducherry

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அவர்கள் எதையுமே செய்யவில்லை. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடாது.

இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான். புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள், அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்" என பேசியுள்ளார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US