நாளை மீண்டும் மக்கள் சந்திப்பை தொடங்கும் விஜய் - இவர்களுக்கு மட்டுமே அனுமதி
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு வார சனிக்கிழமையும், 2 மாவட்டங்களில் மக்கள் சந்தித்து பிரச்சாரம் செய்து வந்தார்.

கரூர் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட துயர சம்பவத்தையடுத்து, பிரச்சார பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்தார்.
விஜய் மக்கள் சந்திப்பு
மீண்டும் நாளை முதல் மக்கள் சந்திப்பை விஜய் தொடங்கியுள்ளார். ஆனால் முந்தைய பிரச்சாரம் போல் திறந்த வெளியில் மக்களை சந்திக்காமல், உள் அரங்கில் வைத்து மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
இந்த மக்கள் சந்திப்பானது, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
— TVK Party HQ (@TVKPartyHQ) November 22, 2025
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00…
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 11 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |