3வது முறையாக மு.க.ஸ்டாலின் தோல்வி - யார் இந்த வி.எஸ்.பாபு?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக்கழகம் 105 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 75 தொகுதிகளிலும், திமுக கூட்டணி தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
மு.க.ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்துள்ளார்.

தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,180 வாக்குகள் பெற்றுள்ளார். சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
வி.எஸ்.பாபு, 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு, கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் இணைந்தார்.
முன்னதாக 1984 மற்றும் 1991 சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
தற்போது 3வது முறையாக மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது திமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.