மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அபார வெற்றி
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் வென்ற எம்.எல்.ஏ.க்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து, இரு தொகுதிகளுக்கும் கடந்த செவ்வாய் அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவிய நிலையில், பொதுத்தேர்தலுக்கு அரசியல் தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர்.
மதுராந்தகத்தில் சுமார் 86 சதவீதமும், தாராபுரத்தில் சுமார் 80 சதவீத வாக்குப்பதிவும் நடைபெற்றது.
இந்நிலையில், பதிவான வாக்குகள் பல்வேறு சுற்றுகளாக இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அந்தவகையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை விட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார்.
தாராபுரம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் சத்யபாமா, திமுக வேட்பாளர் சுகன்யாவை விட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |