144 பேர் ஆதரவு.., நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி
தமிழக சட்டசபையில் இன்று அரசு சார்பில் நம்பிக்கை தீர்மானம் நடைபெற்றது.
இதுகுறித்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்ததை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பேசினர்.
இதனைத்தொடர்ந்து, சட்டசபை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முதல் பிரிவில் 30 எம்எல்ஏக்களும், 2வது பிரிவில் 42 எம்எல்ஏக்களும், 3வது பிரிவில் 46 எம்எல்ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

4வது பிரிவில் எஸ்.பி. வேலுமணி தரப்பை சேர்ந்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, 5 மற்றும் 6வது பிரிவுகளிலும் வாக்கெடுப்பு நடைபெற்றது.
மொத்தமாக 144 உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது.
இதனால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்கிறது.
சட்டசபை வாக்கெடுப்பு முடிவை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |