2026 சட்டமன்ற தேர்தல்; ஸ்டாலினுக்கு எதிராக பிரபல தொழிலதிபரை களமிறக்க உள்ள விஜய்

Vijay M K Stalin Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Nov 29, 2025 09:27 AM GMT
Report

2026 சட்டமன்ற தேர்தலில், முதல் முறையாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், 2026 தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என தனது தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் கூறி வருகிறார். 

2026 சட்டமன்ற தேர்தல்; ஸ்டாலினுக்கு எதிராக பிரபல தொழிலதிபரை களமிறக்க உள்ள விஜய் | Tvk Ybm Travels Balaji To Contest Against Mkstalin

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சிப்பணியை தீவிரப்படுத்தியுள்ள விஜய் பூத் ஏஜென்ட் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

புதுச்சேரி ரோடு ஷோவிற்கு அனுமதி மறுப்பு

மேலும், கரூர் துயரத்துக்கு பின்னர் முடங்கியிருந்த விஜய் செங்கல்பட்டில் மீண்டும் மக்கள் சந்திப்பை தொடங்கி, அடுத்தடுத்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தல்; ஸ்டாலினுக்கு எதிராக பிரபல தொழிலதிபரை களமிறக்க உள்ள விஜய் | Tvk Ybm Travels Balaji To Contest Against Mkstalin

வரும் டிசம்பர் 5 ஆம் திகதி புதுச்சேரியில் ரோடு ஷோ செல்ல விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், அண்டை மாவட்ட மக்கள் அதிகளவில் வர வாய்ப்புள்ளதால், கரூர் சம்பவம் போல் நிகழ வாய்ப்புள்ளது என கூறி காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது.

சமீபத்தில் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், தவெகவில் இணைந்தது கட்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

2026 சட்டமன்ற தேர்தல்; ஸ்டாலினுக்கு எதிராக பிரபல தொழிலதிபரை களமிறக்க உள்ள விஜய் | Tvk Ybm Travels Balaji To Contest Against Mkstalin

அதிமுகவில் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார பயணங்களை வகுக்கும் பணியை செங்கோட்டையனே மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில், தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியிலும் தவெக இறங்கியுள்ளது.

மாவட்ட செயலாளர்களிடம் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களின் பட்டியலை கோரியுள்ளது. மறுபுறம் தனியார் ஏஜென்சி மூலம் வேட்பாளர் பட்டியலை தயாரிக்க உள்ளது. 

விஜய் கூட்டணியில் இணைய உள்ள புதிய கட்சி - புதுச்சேரியில் வலுப்பெறும் தவெக

விஜய் கூட்டணியில் இணைய உள்ள புதிய கட்சி - புதுச்சேரியில் வலுப்பெறும் தவெக

முதற்கட்டமாக, சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

கொளத்தூர் தவெக வேட்பாளர்

முதல்வர் ஸ்டாலின், கடந்த 2011 சட்டமன்ற தேர்தல் முதல் தொடர்ச்சியாக 3 முறை கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தல்; ஸ்டாலினுக்கு எதிராக பிரபல தொழிலதிபரை களமிறக்க உள்ள விஜய் | Tvk Ybm Travels Balaji To Contest Against Mkstalin

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை நிறுத்த உள்ளதாக முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில், YBM டிராவல்ஸ் நிறுவனர் பாலாஜியை ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2026 சட்டமன்ற தேர்தல்; ஸ்டாலினுக்கு எதிராக பிரபல தொழிலதிபரை களமிறக்க உள்ள விஜய் | Tvk Ybm Travels Balaji To Contest Against Mkstalin

பாலாஜி ஏற்கனவே தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை தனது பேருந்து மூலம் அழைத்து வந்து விஜய் சந்திக்க வைக்கும் நிகழ்வை இவரே ஒருங்கிணைத்துள்ளார்.

விரைவில் தேர்தல் பட்டியலை வெளியிட்டு, களப்பணிகளை தொடங்க தவெக தயாராகி வருகிறது.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US