Apache RTR 165 RP இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

Bike Apache RTR 165 RP Apache RTR TVS
By Ragavan Dec 27, 2021 12:42 AM GMT
Report

TVS நிறுவனம் அதன் Apache RTR RP சீரிஸின் முதல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓசூரை தளமாகக் கொண்ட மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான TVS, இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட TVS Apache 165 RTR ரேஸ் பெர்ஃபாமென்ஸ் (Race Performance) எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ.1.45 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த புதிய எடிஷன் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TVS Apache சீரிஸ் மோட்டார் சைக்கிள்களில் Race Performance சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த Apache 165 RTR RP பைக் எடிஷன் இந்தியாவில் நிறுவனத்தின் ரேஸ் பெர்ஃபாமென்ஸ் சீரிஸின் வெளிவந்துள்ள கீழ் முதல் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இந்த புதிய TVS பைக் எடிஷன் Bajaj Pulsar 150, Yamaha FZ16 மற்றும் 150-160cc பிரிவில் உள்ள மற்ற மோட்டார் சைக்கிள்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பாச்சி RTR வரிசையை பொறுத்தவரை, Apache 165 RTR RP ஆனது அப்பாச்சி RTR 160 4Vக்கு மேலேயும் அப்பாச்சி RTR 200 4Vக்குக் கீழேயும் உள்ளது.

RTR 165 RP பைக்கானது Apache RTR 160 4V அடிப்படையிலானது ஆனால் அதை விட அதிக விலை கொண்டது. Apache 165 RP பைக்கை இந்த பிரிவில் மிகவும் சக்தி வாய்ந்த பைக்காக மாற்றும் புதிய எஞ்சின் இடம் பெற்றுள்ளதே இந்த அதிக விலைக்கு காரணம்.

TVS Motors நிறுவனம், இந்த புத்தம் புதிய எடிஷன் 200 யூனிட்ககளை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து உள்ளது. மேலும் இந்த பைக்கை வாடிக்கையாளர்கள் இப்போது புக்கிங் செய்ய கிடைக்கிறது என்றும் TVS குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய TVS Apache RTR 165 RP பைக் 164.9 cc சிங்கிள் சிலிண்டர், நான்கு வால்வு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 10,000 rpm-ல் 19 bhp பவரையும் மற்றும் 8,750 rpm-ல் 14 Nm டார்க்கை வெளிப்படுத்தும்.

இந்த பைக்கின் எஞ்சின் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெட் அலாய் வீல்கள் மற்றும் புதிய சீட் பேட்டர்ன் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.

இந்த பைக்கில் சிக்னேச்சர் ஃப்ரன்ட் பொஷிஷன் லேம்ப்புடன் (front position lamp) அக்ரஸிவ்வான ஹெட்லேம்ப் உள்ளது. அனைத்து LED கிளாஸ் B ஹெட்லேம்ப்களும் 5 LED-க்களை கொண்டுள்ளது.

இதில் 2 லோ பீம், 3 ஹை பீம் ஆகும். இந்த பைக்கில் 240 மிமீ ரியர் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அட்ஜஸ்டபுள் கிளட்ச், பிரேக் லிவர்கள் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவற்றை கொண்டுள்ளது. கூடுதலாக பைக்கில் பிராஸ் கோட்டட் செயின் (brass coated chain) உள்ளது. இது கூடுதல் நீடித்த தன்மையை வழங்கும். 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US