TVS Apache RTX 300: இந்தியாவில் அறிமுகமான புதிய Adventure மோட்டார் சைக்கிள்
TVS நிறுவனம் தனது புதிய Adventure மோட்டார் சைக்கிளான Apache RTX 300-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது adventure tourer வகையைச் சேர்ந்தது மற்றும் KTM 250 Adventure, Yezdi Adventure, Royal Enfield Scram போன்ற மொடல்களுக்கு போட்டியாக வருகிறது.
இந்த மோட்டார் சைக்கிளின் விலை ரூ.1.99 லட்சம் (ex-showroom) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Apache RTX 300-ல் 299cc RT-XD4 எனப்படும் புதிய single-cylinder engine உள்ளது. இது 9,000 rpm-ல் 35.5 hp சக்தியையும், 7,000 rpm-ல் 28.5 Nm torque-ஐ வழங்கும் திறன் கொண்டது.
6-speed gearbox, bi-directional quick-shifter மற்றும் slipper clutch ஆகியவை மிருதுவான transmission-ஐ வழங்குகின்றன.
வடிவமைப்பில், steel trellis frame, aluminum swingarm, muscular fuel tank, பெரிய fenders மற்றும் windscreen ஆகியவை உள்ளன. LED headlamps, turn indicators மற்றும் beak-like nose design காருக்கு தனித்துவம் தருகின்றன.
Viper Green, Tarn Bronze, Metallic Blue, Lightning Black, Pearl White என 5 வண்ணங்களில் கிடைக்கிறது.
அம்சங்களில், full-colour TFT display மூலம் வேகத்துடன் கூடிய தகவல்கள், call/SMS alerts, GoPro control மற்றும் map mirroring போன்றவை வழங்கப்படுகின்றன.
Tour, Rally, Urban, Rain என 4 ride modes மற்றும் ABS, traction control, cruise control, TPMS ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
இந்த மொடல், இந்தியாவின் adventure bike சந்தையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |