பிரபல சுவிஸ் நிறுவனத்தை வாங்கிய தமிழக நிறுவனம்!
தமிழகத்தின் தலைநகரமான சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் TVS மோட்டார் நிறுவனம் சுவிட்சர்லாந்தின் மின்சார சைக்கிள் தயாரிக்கும் நிறுவனத்தை ரூ. 752 கோடிக்கு வாங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பிரபலமான Swiss e-mobility Group என்னும் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை TVS மோட்டார் நிறுவனம் (TVS Motor Company) கையகப்படுத்தி உள்ளது.
மேலும், மீதமுள்ள 25 சதவீத பங்குகள் ஓராண்டுக்குள் கையகப்படுத்தப்படும் என TVS நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சுவிஸ் நிறுவனத்தின் Cilo, Simpel, Allergo , Zenith ஆகிய நான்கு மொடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனை செய்ய TVS நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே சென்ற ஆண்டு செப்டம்பரில் சுவிட்சர்லாந்தின் EGO Movement என்ற மின்சார சைக்கிள் நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.