புதிய TVS Orbiter எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: 5 முக்கிய அம்சங்கள்
TVS நிறுவனம் இந்திய நகர்ப்புற பயணிகளுக்காக புதிய மின்சார ஸ்கூட்டரான Orbiter-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது i-Qube-ஐ விட மலிவான விலையில் கிடைக்கும், ஆரம்ப விலை மின்சார ஸ்கூட்டராகும்.
TVS Orbiter 5 முக்கிய அம்சங்கள்
1. மிகவும் மலிவான TVS மின்சார ஸ்கூட்டர்
ரூ. 99,900 (Ex-Showroom) விலையில் அறிமுகமான Orbiter, TVS-ன் மின்சார ஸ்கூட்டர் வரிசையில் மிகவும் மலிவானதாகும்.
2. பயனுள்ள வடிவமைப்பு
பரந்த ஹேண்டில்பார், நீளமான கால் வைக்கும் பகுதி, 34 லிட்டர் சேமிப்பு வசதியுடன் கூடிய நீளமான சீட் உள்ளது. இதில் 2 ஹெல்மெட் எளிதாக வைக்கமுடியும்.
3. 6 வண்ண விருப்பங்கள்
Neon Sunburst, Stratos Blue, Lunar Grey, Stellar Silver, Cosmic Titanium மற்றும் Martian Copper என 6 dual வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
4. தொழில்நுட்ப வசதிகள்
இதில் cruise control, hill-hold assist, call மற்றும் message அறிவிப்புகளைக் காட்டும் Bluetooth LCD cluster, OTA updates, geo-fencing, navigation, time-fencing, reverse parking, USB charging உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
5. ரேஞ்ச், சார்ஜிங் மற்றும் வேகம்
3.1kWh பேட்டரியுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கி.மீ. வரை பயணிக்கலாம்.
0-80 சதவீதம் சார்ஜ் செய்ய 4 மணி 10 நிமிடங்கள் தேவைப்படும்.
அதிகபட்ச வேகம் - மணிக்கு 68 கி.மீ.
முன்சக்கரம் 14 இன்ச், பின் சக்கரம் 12 இன்ச், CBS Drum braking வசதி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |