ரூ.49,999-யில் TVS Orbiter V1 மின்சார ஸ்கூட்டர்- பேட்டரி சந்தா முறை அறிமுகம்
TVS மோட்டார் நிறுவனம், இந்தியாவில் மின்சார வாகனங்களை மலிவாகக் கிடைக்கச் செய்வதற்காக புதிய Orbiter V1 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த வாகனம், ரூ.49,999 (ex-showroom Delhi, PM e-Drive மானியத்துடன்) விலையில் கிடைக்கிறது.
இந்த விலை, Battery-as-a-Service (BaaS) எனப்படும் புதிய சந்தா முறையின் மூலம் வழங்கப்படுகிறது.
இதில் வாகனத்தை வாங்கும் போது பேட்டரிக்கான முழு தொகையை செலுத்த வேண்டியதில்லை. மாதாந்திர சந்தா கட்டணம் செலுத்தி பேட்டரியைப் பயன்படுத்தலாம்.

மாதம் ரூ.862 முதல் தொடங்கும் இந்த திட்டத்தில், 5 ஆண்டுகள் அல்லது 70,000 கி.மீ வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
Orbiter V1, 1.8 kWh பேட்டரி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 86 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆக சுமார் 2 மணி 20 நிமிடங்கள் ஆகும்.
நகரப் பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் 34 லிட்டர் சேமிப்பு இடம், இரண்டு ஹெல்மெட்டுகள் வைக்கக்கூடிய வசதி, LCD டிஸ்ப்ளே, மொபைல் ஆப் இணைப்பு, பாதுகாப்பு அலாரங்கள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், மற்றும் OTA அப்டேட்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.
TVS, இதற்கு முன் அறிமுகப்படுத்திய Orbiter V2 (3.1 kWh பேட்டரி) மொடலுக்குப் பிறகு, மலிவு விலையில் கிடைக்கும் V1 மாடலை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், Ola Electric, Ather Energy, Bajaj Chetak போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக TVS வலுவான நிலையைப் பெற முயற்சிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |