TVS நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்.., விலை எவ்வளவு?
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் புதியதாக Ntorq 150 என்ற ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்கூட்டர் அறிமுகம்
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனமானது TVS Ntorq 150 என்ற புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் ரூ.1.19 லட்சத்திற்கு ex-showroom விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் 149.7cc, 3-valve, air-cooled engine பொருத்தப்பட்டு உள்ளது. இது 7,000 ஆர்பிஎம்-இல் 13.2 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 14.2 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதனுடன் CVT gearbox இணைக்கப்பட்டுள்ளது.
புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 104கிமீ ஆகும். இதனால் இந்தியாவில் அதிவேகமான 150 cc ஸ்கூட்டராக உள்ளது.
இதில் சஸ்பென்ஷன் சுருள்கள் செயல்படும் விதம் மற்றும் Damping உள்ளிட்டவை மாற்றப்பட்டு உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |