TVS அறிமுகப்படுத்தும் புதிய M1-S Maxi-Style எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்தியாவின் மிகவும் பிரபலமான இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பாளரான TVS நிறுவனம், அதன் புதிய Maxi-Style எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிவிஎஸ் தனது புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புகைப்படங்களை முதல்முறையாக வெளியிட்டுள்ளது.
ஆனால் நிறுவனம் தனது இந்திய வலைதளத்தில் அல்லாமல் இந்தோனேசிய வலைதளத்தில் புகைப்படங்களை டீஸ் செய்துள்ளது.
அதன்படி TVS M1-S Maxi-Style எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்தியா மட்டுமின்றி உலக சந்தைகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம் இதற்கு முன்னதாக, குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பில் iQube மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் TVS X ஆகிய ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இதுவே நிறுவனத்தின் முதல் Maxi-Style ஸ்கூட்டர் ஆகும்.
M1-S மொடல் உலகளவில் TVS-ன் பெயரை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் பிரபலப்படுத்தும் என நிறுவனத்தின் நம்பிக்கையாக உள்ளது.
இது TVS-ன் Reimagine 2030 vision-க்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.
M1-S வடிவமைப்பு
வெளியாகியுள்ள புகைப்படங்களின்படி, இந்த புதிய ஸ்டைலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், Twin HeadLights, இமைகள் போன்ற வடிவமைப்பில் strip LED-DRL Lights, உயரமான Windscreen போன்ற அம்சங்கள் உள்ளன.
மேலும், stepped single-piece Seat, single-piece grab rail, பின்புறம் LED lights, LED indicators, தடிமனான டயர்கள், இருபுறமும் disc brakes உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்கள் உள்ளன.
இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் பல முக்கிய விவரங்களை நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
TVS M1-S Maxi-Style Electric Scooter teases, TVS M1S Maxi EV Scooter, TVS EV Scooter 2025 launch, TVS M1-S Maxi-Style India Launch, TVS M1-S Electric Scooter Indonesia, ION M1-S Maxi-Style